கோவையில் காரிலிருந்து மனைவியை தள்ளி விட்டகணவன்

by Nila | June 12, 2019 10:29 pm

ஓடும் காரில் இருந்து, மனைவியை கணவன் தள்ளி விட்டதாக, வெளியான, ‘வாட்ஸ் ஆப்’ வீடியோ, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை அருகே உள்ளது, தொப்பம்பட்டி, இங்குள்ள கணபதி கார்டனில் வசிப்பவர், அமல்ராஜ், 40; சென்னை, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனைவி ஆர்த்தி, 38. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 

தகராறு : தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், இருவரும் ஊட்டி சென்றனர். அங்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆர்த்தி, ஊட்டி போலீசில் புகார் செய்ய, போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.கடந்த மாதம், வீட்டில் இருந்து இருவரும் காரில் சென்னை புறப்பட்டனர். அப்போது, ஏற்பட்ட தகராறில், ஓடும் காரில் இருந்து, அமல்ராஜ், தன்னை தள்ளி விட்டதாக, ஆர்த்தி, துடியலுார் போலீசில் புகார் செய்தார்.போலீசார், அமல்ராஜ் மீது, காயம் ஏற்படுத்துதல், பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

ஆனால், அமல்ராஜ் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில், ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓடும் காரில் இருந்து ஆர்த்தியை கீழே தள்ளி விடுவது போன்ற வீடியோ பரவியது. இதனால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.விசாரணைதுடியலுார், போலீசார் கூறியதாவது:இச்சம்பவம் குறித்து, எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. அமல்ராஜிடம் விசாரணை நடத்தியதில், ஆர்த்தி ஓடும் காரில் இருந்து, கதவை திறந்து குதித்து விட்டார் எனவும், தான் தள்ளி விடவில்லை எனவும் கூறினார். 
இருவருக்கும், அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம். இருப்பினும், விசாரணை தொடர்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்நிலையில், ‘கணவர் அமல்ராஜ், மாமனார், மாமியாரை கைது செய்ய வேண்டும்’ என, போலீசாரிடம் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Source URL: http://tamilnaadu.news/archives/759