கையில் அரை டஜன் படம்! ஒதுக்கிவைத்துவிட்டு பிக்பாஸ் வரும் முன்னணி நடிகை

by Nila | June 4, 2019 12:33 am

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்தான் மூன்றாவது சீசனிலும் தொடர்கிறார்.

மேலு தற்போது இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் தினமும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல தமிழ் நடிகை சாந்தினி தமிழரசன் பிக்பாஸ் 3ல் வருகிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது சாந்தினி கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளதாம். அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு சாந்தினி பிக்பாஸ் வரவுள்ளார்.

Source URL: http://tamilnaadu.news/archives/752