திடீர் தீ விபத்தில் 20 வீடுகள் நாசம்

by Nila | June 4, 2019 12:24 am

தஞ்சாவூர், சின்னகண்டியூரில், சுரேஷ், 45, என்பவரின், கூரை வீட்டில், நேற்று மதியம், மின்கசிவால், தீப்பற்றியது. காற்றின் வேகத்தால், தீ மளமளவென, அருகிலிருந்த, 20 கூரை வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து, திருவையாறு, திருகாட்டுப்பள்ளி, தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., மகேஷ்வரன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.

Source URL: http://tamilnaadu.news/archives/746