நாய்கள் இழுத்து சென்ற குழந்தையை திருநங்கைகள் மீட்டு ஒப்படைப்பு

by Nila | June 2, 2019 11:09 pm

தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை, நாய்கள் இழுத்து சென்ற நிலையில், அதை பார்த்த, திருநங்கைகள் நாய்களை துரத்தி, குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
ஊத்துக்கோட்டை- – நாகலாபுரம் சாலையில், தமிழக மதுவிலக்கு சோதனைச்சாவடி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் திடீரென நாய்கள் சூழ்ந்த நிலையில், குழந்தையின் சத்தம் கேட்டது.அவ்வழியே சென்ற திருநங்கைகள், சத்தம் கேட்ட பகுதிக்குச் சென்று பார்த்தபோது, குழந்தையை நாய்கள் இழுத்து சென்றது தெரிய வந்தது.நாய்களை துரத்திய திருநங்களைகள், குழந்தை மீட்டு, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.போலீஸ் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரிமற்றும் போலீசார் குழந்தையை மீட்டு,ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில்ஒப்படைத்தனர்.அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தை ஆரஞ்சு கலர் நிலத்தில் சட்டை அணிந்திருந்தது. தொப்புள் கொடி முழுவதும் விழாத நிலையில் குழந்தையை பார்த்த பொதுமக்கள் மனம் நெகிழ்ந்தது.இதுவரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை. பிறந்து, இரண்டு நாட்கள் ஆன நிலையில், ஆண் குழந்தை, 2.700 கிராம் எடை இருந்தது

Source URL: http://tamilnaadu.news/archives/737