தொழில்நுட்பத்தில் அசத்தும் நடமாடும் பஞ்சர் கடைக்காரர்

தொழில்நுட்பத்தில் அசத்தும் நடமாடும் பஞ்சர் கடைக்காரர்
June 02 00:46 2019 Print This Article

சேலத்தில், நடமாடும் பஞ்சர் கடை வைத்துள்ளவர், சூரிய ஒளி மின்சாரம் மூலம், ‘மினி கம்ப்ரஷர்’ மோட்டாரை இயக்கி, பஞ்சரான டியூப்களுக்கு காற்றடித்து அசத்தி வருகிறார்.
சேலம், பெரமனுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 45. கடந்த, 25 ஆண்டுகளாக, நான்கு சாலை சந்திப்பு அருகே, ஓமலுார் பிரதான சாலையில், பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடமாடும் பஞ்சர் கடையை துவங்கி, இரு சக்கர வாகனங்களுக்கு, பஞ்சர் ஒட்டி வருகிறார்.இதற்காக, ‘மினி ஏர் கம்ப்ரஷர்’ மோட்டாரை, கார் பேட்டரி துணையுடன் இயக்கி, டியூப்களுக்கு காற்றடித்தார். மின் தடை நேரம், பேட்டரிக்கு சார்ஜ் போடாத போது, சிரமப்பட்டார். இதனால், மாற்று வழியை யோசிக்கத் துவங்கினார்.
இதன்படி, சூரிய ஒளி மின்சாரம் மூலம், மினி கம்ப்ரஷரை இயக்க முடிவு செய்தார். இதற்காக தன், ‘டி.வி.எஸ்., எக்ஸல் 100’ மொபட் பின்புறம், சூரிய ஒளி பேனலை அமைத்தார்.அதிலிருந்து, தான் ஏற்கனவே பயன்படுத்திய பேட்டரியில், இணைப்பை ஏற்படுத்தி, மின்சாரம் தயாரித்து, மினி கம்ப்ரஷரை இயக்கி, டியூப்களுக்கு காற்றடிக்கிறார்.
கண்ணன் கூறியதாவது:என் கடைக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளது. சூரிய ஒளி பேனலுக்கு, 3,000 ரூபாய், அதை பொருத்தும் கம்பிகளுக்கு, 500 ரூபாய் செலவு. கார் பேட்டரி, மினி கம்ப்ரஷர் ஏற்கனவே பயன்படுத்தியதையே, இதற்கும் பயன்படுத்துகிறேன்.இத்திட்டம் மூலம், பேட்டரிக்கு சார்ஜ் செய்வதால், மாதம், 500 ரூபாய் வரை மிச்சமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இத்திட்டத்தை பயன்படுத்தவோ, இவரை பாராட்டவோ, 94863 49411, 91235 25997 என்ற மொபைல் எண்களில் அழைக்கலாம்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.