படகு போட்டிகளுடன் கோடை விழா நிறைவு

படகு போட்டிகளுடன் கோடை விழா நிறைவு
June 02 00:39 2019 Print This Article

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மே, 1ல், கோடை விழா துவங்கியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஊட்டியில் மலர் கண்காட்சி, குன்னுாரில் பழக் கண்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் நடந்தன.சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், ‘சுற்றுலா துறை சார்பில், நாட்டுப்புற கலைகள், பரத நாட்டியம், பிற மாநில கலாசாரம், இன்னிசை கச்சேரி, கலைஞர்களின் நிகழ்ச்சிகள்’ என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.கோடை விழா நிகழ்ச்சிகள், நேற்று முன்தினம் நிறைவு பெற்றன. நேற்று காலை, கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, படகு இல்லத்தில் நடந்தது.நீலகிரி கலெக்டர், இன்னொசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், ”தேர்தல் விதிகள் அமலில் இருந்த காரணத்தால், நடப்பாண்டில், முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் நடத்த முடிந்தது. கோடை விழாவை, 10 லட்சம் சுற்றுலா பயணியர் பார்வையிட்டுள்ளனர்,” என்றார்.பின், ஊட்டி ஏரியில் நடந்த படகுப் போட்டியில், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகவும், இருவர் பங்கேற்ற படகு போட்டியும் நடந்தது. படகு இல்ல ஊழியர்களுக்கும் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.