தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
June 02 00:38 2019 Print This Article

கோடை விடுமுறை இன்றுடன் முடிவதால் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 3) முதல் பள்ளிகள் திறக்க உள்ளது. இதனால் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஏராளமான வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிகின்றனர். நேற்று அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அழகிய கடற்கரை, கடல் அலையை கண்டு ரசித்தனர். இக்கடலின் விபரீதம் தெரியாமல் ஏராளமான பயணிகள் ஆனந்தமாக நீராடினர். அவர்களை மரைன் போலீசார் அப்புறப்படுத்தினர். 1964 ல் புயலில் இடிந்த தனுஷ்கோடி சர்ச், விநாயகர் கோயில், ரயில்வே கட்டடங்களை கண்டு ரசித்து செல்பி எடுத்தனர். ஜூன் 3 க்கு பிறகு ராமேஸ்வரம், தனுஷ் கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும், என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.