12 ராசிக்காரர்களே! உங்களுக்குள் இருக்கும் அதீத திறமை என்னனு தெரியணுமா?அப்போ உடனே இத படிங்க

May 30 23:32 2019 Print This Article

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளது. அது வெளிப்படும் தருணத்திற்காக நம் ஒவ்வொருவருடைய மனதும் அந்த சக்தி வெளிப்படக் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் 12 ராசிக்காரர்களுக்குள் இருக்கும் அதீத திறமைகள் என்ன என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். எதிலும் வலிமையும் அதீத வேகமும் கொண்டவராக இருப்பார்கள்.

உதாரணமாகச் சொல்லப் போனால், வேகமான துப்பாக்கியின் புல்லட்டை விட வேகமாக உங்களால் பாய்ந்து செல்ல முடியும்.

ரிஷபம்

உங்கள் நேரத்தை மெதுவாக்கும் தன்மை உள்ளவர்கள். அதாவது எதையுமே மிகப் பொறுமையாக அணுகக் கூடியவர்கள் தான் ரிஷப ராசிக்காரர்கள்.

நேரத்தை மிதப்படுத்தும் தன்மை உங்களுக்கு உண்டு. உங்களை யாராலும் எந்த விஷயத்திலும் எளிதில் உடைத்துவிட முடியாது.

வாழ்க்கையில் கடும் புயல், பேரழிவு மற்றும் கடுமையான பாரங்களையும் மிக எளிமையாகத் தாங்கக் கூடியவர் நீங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் விலங்குகளிடமும் எளிதில் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். மிகத் துல்லியமான நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

எந்த உயிரில்லாத பொருட்கள் மற்றும் மிருகங்களிடமும் எளிமையாகத் தொடர்பு கொள்ளும் திறன் உள்ளவர் தான் மிதுன ராசிக்காரர்கள். உங்களுடைய அறிவுத் திறனுக்குச் சமமான விஷயம் வேறு எதுவுமே கிடையாது.

கடகம்

நீங்கள் மற்றவர்களிடம் மிக எளிதில் தொடர்பு கொள்வீர்கள். மற்றவர்களுடைய உணர்சிகளைக் கட்டுப்படுத்த உங்களால் மட்டும்தான் முடியும்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், உணர்வார்கள் என்பதை உங்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். எந்த பிற உயிரினங்களோடும் உணர்வு ரீதியாக உங்களால் இணைந்து செயல்பட முடியும்.

சிம்மம்

நீங்கள் எந்த காரியத்தைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும். நீங்கள் உங்களுடைய முழு திறமையினால் எந்த ஒரு மிகப்பெரிய சாதனையையும் நிகழ்த்திக் காட்டுவீர்கள். நீங்கள் எதை தொட்டாலும் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

உங்கள் ஞான வெளிச்சத்தின் மூலம் எதிரிகளை எளிதாக குருடாக்கலாம். உங்களை பயமுறுத்துகிற ஆட்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சில வினாடிகளில் ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை உங்களால் உருவாக்க முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் அதிக வேகமும் மற்றும் தீவிர செய்கையால் மனித சூறாவளியாக மாறி விடுவீர்கள்.

ஒரு பொருளைத் தொடுவதன் மூலம் அதன் எண்ணிலடங்கா ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்களுடைய உடல் மற்றும் மனம் அதிக வலிமை பெற்றுவிடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் தங்களுடைய அதிகாரத்தை செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஒரு முறை பார்த்தவுடன் எந்த ஒரு வெளியையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். எல்லாவற்றையும் எளிதில் உணர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கையை எல்லா கோணத்திலும் இருந்து அணுகுவதற்கு இந்த சக்தி உங்களுக்கு உதவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய மனதை அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியும். எந்த ஒரு மனிதர்களின் மனதையும் உங்களால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரே பார்வையிலேயே ஒருவரின் ஆன்மாவின் ஆழத்தை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரைக்கும் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் யாரிடமிருந்தும் எளிதில் உண்மையை எளிதில் வாங்கி விடுவீர்கள். அடுத்தவர்களிடம் இருந்து எளிதில் உண்மையை வாங்குகின்ற திறன் உங்களுக்கு நிறையவே உண்டு.

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் உங்களுடைய வேலை மிகச் சரியாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் யாரையும் எளிதாக வளைத்து விடுவார்கள். உங்களுடைய மனதில் இருக்கும் அதீத சக்தி மூலம் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் யாரையும் எளிதில் வளைத்துவிட முடியும்.

நீங்கள் மிகவும் எதார்த்தமாகவும் பிராக்டிக்கலாகவும் இருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மிகவும் சுய ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள்.

சில நேரங்களில் நீங்கள் அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். மிகவும் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருப்பார்கள். நீங்கள் புதிய கலாச்சரங்களை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் சுற்றி வருபவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் அதீத மனிதாபிமானம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனாலும் மற்றவர்களை சார்ந்து இருப்பவர்களாக இருப்பீர்கள். நீங்கள் சுதந்திரமானவர் மற்றும் நேர்மையானவர்களாக இருப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எதிலும் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதீத மாயைகளை உருவாக்குபவர்களாக மீன ராசிக்காரர்கள் இருப்பார்கள்.

ஒரு மாயையான விஷயத்தை உருவாக்கும் திறன் கொண்டவர்களான நீங்கள் மற்றவர்களைக் கையாளுகின்ற திறன் கொண்டவராக இருப்பார்கள். நீங்கள் உருவாக்கும் எந்த ஒரு கற்பனையையும் உண்மையாக்கும் திறன் உங்களுக்கு உண்டு.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.