ஸ்ஸ்ஸ்…முடியலைங்க!இ-சலானும் கொடுக்கணும்…  ’இடிக்காமலும்’ பார்க்கணும்!

ஸ்ஸ்ஸ்…முடியலைங்க!இ-சலானும் கொடுக்கணும்…  ’இடிக்காமலும்’ பார்க்கணும்!
May 30 23:00 2019 Print This Article

கோவை மாநகரில் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு, ‘இ-சலான்’ வினியோகிக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் அல்லாடி வருகின்றனர்; ஓய்வு நேரத்தில் செல்வதால், ‘பாயின்ட்’ பணியில் கவனம் செலுத்த முடியாமல் புலம்புகின்றனர். இந்த பணிக்கென, தனியாக வேறு போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.
கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில், பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படும், ‘போலீஸ் இ-ஐ ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டது.வந்தது இ-சலான்!இந்த ‘ஆப்’ மூலம், மாநகர பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, பொதுமக்கள் தங்களது மொபைல்போன் மூலம், ‘போட்டோ’ எடுத்து அனுப்பலாம். ‘போட்டோ’ ஆதாரத்தின் அடிப்படையில், விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் ‘இ-சலான்’ வழங்கி, அபராதம் வசூலிக்கின்றனர்.
தனி ஒருவன்!’
இ-சலான்’ வினியோகிக்கும் பணிக்கென்று, தற்போது ஒரு போலீஸ்காரர் மட்டுமே உள்ளார். இவரால் அனைத்து சலான்களையும், வினியோகிக்க இயலாத நிலை உள்ளது.இதனால், போக்குவரத்து சிக்னல் ‘பாயின்ட்’களில் பணியாற்றும் போக்குவரத்து போலீசார் தங்களின் ஓய்வு நேரத்தில், ‘இ-சலான்’ பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.’பாயின்ட்’களில் உள்ள போலீசார் தினமும் காலை, 7:00-11:00, மதியம், 2:00-6:00 மணி ஒரு ஷிப்டாகவும், காலை, 11:00- 2:00, மாலை 6:00-11:00 மணி என, ஒரு ஷிப்டாகவும் பணியாற்றி வருகின்றனர்.இ-சலான்கள் வழங்க வேண்டிய, வாகன ஓட்டிகளின் தொலைதுார வீடுகளை கண்டுபிடித்து, சலானை கொடுத்து திரும்ப, பல மணி நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக ஓய்வே இல்லாமல் கடும் மனஅழுத்தத்துக்கு, போக்குவரத்து போலீசார் உள்ளாகின்றனர்.’பாயின்ட்’ பணியிலும் கவனம் செலுத்த முடியாததால், மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருப்பதாக, புலம்பித்தீர்க்கின்றனர் போக்குவரத்து போலீசார்.
அவர்கள் கூறியதாவது:இ-சலான் கொடுக்க, ஓய்வு நேரத்தில் செல்வதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ‘பாயின்ட்’ பணிக்கு திரும்ப முடிவதில்லை. விதிமீறலில் ஈடுபடும் சிலர், வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்றுவிடுகின்றனர். பெயர் மாற்றம் செய்யப்படாத காரணத்தால், இவர்களிடம் சலானை கொடுத்தால், வாங்கவும் மறுக்கின்றனர்.இதனால் வாகனத்தை ஓட்டிய நபரை, கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இத்தனைக்கும் மத்தியில், நகரின் போக்குவரத்து நெரிசல் பணியிலும், முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் சிரமப்படுகிறோம். இந்த பணிக்கென, முழு நேரமாக கூடுதல் போலீசாரை நியமிப்பதே, இப்பிரச்னைக்கு தீர்வு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.