கட்சி தொடங்குவது எப்போது? தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக பதிலளித்த நடிகர் ரஜினி

by Nila | May 28, 2019 11:05 pm

பிரபல திரைப்பட நடிகரான ரஜினி கட்சி துவங்கப்போவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனால் பிரதமர் நரேந்திரமோடிக்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி நரந்திர மோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கட்சி எப்போது தொடங்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் சட்டசபை தேர்தல் வர இன்னும் அதிக நேரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசிய போது, நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுகிறோம். கட்சி தொடங்குவதற்கான எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இனி அம்பு விடுவதுதான் பாக்கி என அறிவித்திருந்தார்.

தற்போது மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் அதிக நேரம் இருக்கிறது என்று கூறியதால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Source URL: http://tamilnaadu.news/archives/651