பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது

பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது
May 27 22:54 2019 Print This Article

: மாந்திரீகம் என்ற பெயரில், 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, சிஷ்யையுடன் திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சூணாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவன் மணி, 38; இவன், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூரில், 10 ஆண்டுகளுக்கு முன், கோவில் கட்டி குடியேறினான். மாந்திரீகம், பில்லி, சூனியம் எடுக்கும் வேலையும் பார்த்து வந்தான்.’கடந்த காலங்களில் நடந்தது; இனி வரும் நாட்களில் நடக்கப் போவதையும் சரியாக கணித்துக் கூறுகிறார்’ என, பெண்கள் கூட்டம் அலைமோதியது. 
இதனால், மணி சாமியார் என அழைக்கப்பட்டான்.பல மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பெண்கள், ஜோதிடம் பார்க்க, நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவர், கடந்தாண்டு, மகளுக்கு ஏற்பட்ட காதலை பிரித்து தருமாறு வேண்டிஉள்ளார்.கருணாகரன் வீட்டிற்கு சென்ற மணி, ‘வீட்டில் தீய சக்தி இருக்கு. இந்த ஊரில் கோவில் கட்டுவதால், உங்கள் பெண் இங்கு இருக்கக் கூடாது. வேறு எங்கேயாவது தங்க விடுங்கள். நீங்கள் சம்மதித்தால், என் வீட்டிலேயே தந்தையை போல் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளான் . 

பெற்றோரும், 17 வயது மகளை அனுப்பி வைத்தனர். சாமியார் செலவில், அந்த சிறுமியும் இரண்டு ஆண்டுகள் படித்து வந்துள்ளார். அவ்வப்போது சென்று, மகளை பெற்றோர் பார்த்து வந்துள்ளனர்.இதற்கிடையே, அந்த பெண் கடந்த மாதம், 8ம் தேதி, 19வது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், சாமியாரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன், அப்பெண்ணை, சாமியார் பலாத்காரம் செய்துள்ளான்.தன் தந்தையிடம், அப்பெண் புகார் தெரிவித்து, கதறி அழுதுள்ளார். கருணாகரன் புகாரின்படி, திண்டிவனம் மகளிர் போலீசார், மணி சாமியாரையும், அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட சிஷ்யை ஹேமா, 40, என்பவளையும் கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறியதாவது:பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மணி, சாமியாரானால் வாழ்க்கையில் வேகமாக முன்னேறி விடலாம் என முடிவு செய்து, கொஞ்சம் ஜோசியம், மாந்திரீகம் பார்க்க தொடங்கினான். நிறைய பெண்களை வசியம் செய்து, பலாத்காரம் செய்துள்ளான்.மணி சாமியாரிடம், ஏழு ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கி சீரழிந்துள்ளனர். 

பணம், நகையும் பறி கொடுத்துள்ளனர். இதை வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக, வெளியில் சொல்லாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.’கெட் அப்’ மாற்றம்தாடி, மீசையுடன் சாமியார் போலவே தோற்றம் இருந்ததால், ஏராளமான பெண்கள், தங்கள் பிரச்னை தீர்க்க இவனை நாடி வந்துள்ளனர். இப்படி வரும் பெண்களை, தன் பக்தைகளாகவே மாற்றிக் கொள்வான். ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அந்தரங்க சிஷ்யை யார்?மாந்திரீகம், பில்லி சூனியம் எடுப்பது போன்று, பெண்களை கவர்ந்து, தன்னுடன் வைத்து சில காலம் குடும்பம் நடத்துவான். பின், அந்த பெண்ணை விட்டு, வேறு பெண்ணை தன் வசமாக்கி, சிறிது காலம் குடும்பம் நடத்துவான். இதேபோன்று மாந்திரீகம் செய்ய ஆத்துார் சென்றபோது, தன் பக்தையான வேறு ஒருவரின் மனைவி தான், கைது செய்யப்பட்ட, அந்தரங்க சிஷ்யை ஹேமா; பி.எஸ்சி., இயற்பியல் பட்டதாரி.18 வயது முடிய காத்திருந்த காமுகன்வெளி உலகத்திற்கு மகள் மாதிரி என கூறி வந்தாலும், சிறுமியின் மீது, சாமியாருக்கு ஒரு கண் இருந்து வந்துள்ளது. 

ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளான். ஆனால், சிறுமியை திருமணம் செய்தால், சிறையில் போட்டு விடுவர் என்பதால், அமைதியாக காத்திருந்துள்ளான். கடந்த மாதம், 8ம் தேதி அப்பெண்ணிற்கு, 18 வயது முடிந்ததும் பலாத்காரம் செய்துள்ளான். ‘எதற்காக இப்படி செய்தாய்’ என போலீசார் கேட்டபோது, ‘கன்னி பெண்ணை திருமணம் செய்தால் சக்தி கிடைக்கும். அதனால் தான்’ எனக் கூறியுள்ளான்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.