கடல் உள் வாங்கியதால் சுற்றுலா பயணியர் அச்சம்

கடல் உள் வாங்கியதால் சுற்றுலா பயணியர் அச்சம்
May 26 23:57 2019 Print This Article

ராமநாதபுரம்:தேவிபட்டினம் நவபாஷாண கடல் உள்வாங்கியதால், நவகிரகங்களை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், அச்சமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில், நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. இங்கு, திருமண தடை, குழந்தை பாக்கியம், முன்னோருக்கு தர்ப்பணம் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய, சுற்றுலா பயணியர் தினமும் வருகின்றனர்.இப்பகுதியில், நேற்று அதிகாலை முதல், கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதியில், குறைந்தளவு தண்ணீரே இருந்ததால், பக்தர்கள் அச்சமடைந்தனர். மாலை, 3:00 மணிக்கு மேல், கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது.அப்பகுதியினர் கூறுகையில், ‘சில நாட்களாக, பல்வேறு பகுதிகளிலும் கடல் உள்வாங்கி வருகிறது. பொதுவாக, கடல் உள்வாங்குவது இயல்பு தான். ‘நவபாஷாணம் பகுதியில், வழக்கத்தை விட கூடுதல் தொலைவு உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பக்தர்கள் அச்சமடைந்தனர்’ என்றனர்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.