நடிப்பதை நிறுத்த போகிறேன்! இரவு முழுவதும் கண்ணீர் விட்ட சாய் பல்லவி! NGK ஷூட்டிங்கில் என்ன நடந்தது?

by Nila | May 25, 2019 1:33 am

நடிகை சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கூறியுள்ள அவர், விரும்பும் ரிசல்ட் வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். ஒரு நாள் அப்படி காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த நடிப்பு என்னிடம் வரவில்லை, நாளை பாப்போம் என கூறிவிட்டார்.

நான் வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் கதறி அழுதேன். எனக்கு நடிப்பு வரவில்லை, டாக்டர் வேலைக்கே சென்று விடுகிறேன் என கூறினேன்.

இரவு முழுவதும் அழுதுவிட்டு மறுநாள் காலை முதல் ஷாட்டிலேயே செல்வராகவன் ஓகே செய்தார். ‘அம்மா போன் செய்தார்களா?’ என் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது இப்போது கிடைத்தது’ என பதில் அளித்தாராம் செல்வராகவன்.

Source URL: http://tamilnaadu.news/archives/605