வவுனியா கந்தபுரம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

by Nila | May 22, 2019 11:50 am

தோட்டக்காணியை பேக்கோ இயந்திரம் மூலம் காணி உரிமையாளர் துப்பரவு செய்துள்ளார். இதன்போது அங்கு அகற்றப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டபோது கைக்குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது.

இதனையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது வெடிக்காத நிலையில் மேலும் ஓர் கைக்குண்டை மீட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டும் மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிக்க செய்யும் பொருட்டும் வவுனியா நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு இன்று (22.05.2019) சற்று முன் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவ இடத்தில் தற்போது பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டு 82- வகையினை சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Source URL: http://tamilnaadu.news/archives/537