கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

by Nila | May 21, 2019 5:13 pm

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 06 வயது சிறுவன் ஒருவன், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளான்

நேற்று (20) மாலை குறித்த சிறுவனின் தந்தை உழவு இயந்திரத்தில் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிலையில், உழவு இயந்திரத்தின் சாவியுடன் உழவு இயந்திரத்தை நிறுத்தி வைத்துவிட்டு உணவு உட்கொண்டிருந்துள்ளார். அவ்வேளையில், குறித்த சிறுவன் உழவு இயந்திரத்தில் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியபோது, உழவு இயந்திரம் இயங்கி அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதன்போது, குறித்த சிறுவன் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளதாக, குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி,கோணாவில் காந்தி ஆரம்பவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Source URL: http://tamilnaadu.news/archives/510