பெண்களே இனி முடி அகற்ற வாக்சிங் தேவையில்லை.. இந்த பொடி ஒன்றே போதும்

பெண்களே இனி முடி அகற்ற வாக்சிங் தேவையில்லை.. இந்த பொடி ஒன்றே போதும்
May 19 12:52 2019 Print This Article

இன்றைய நவீன கால பெண்கள் அதிகம் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பது பியூட்டி பாலர்களில் தான்.

பேசியல்,கிளின் அப், சிகை அலங்காரம்,வாக்சிங்,பெடிக்யூர்,மெனிக்யூர் போன்றவற்றை செயற்கையாக தயாரிக்கப்படும் கிறீம்களிலே செய்கின்றனர்.

இதில் தேவையற்ற முடியை நீக்க பெண்கள் வாக்சிங்கிலில் தான் மிகவும் சிரமப்படுகின்றனர்.

முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. இதனால் வாக்சிங் செய்ய அவசியம் இருக்காது.

அந்த வகையில் இயற்கை சிகிச்சையில் தேவையற்ற முடியை நீக்கும் போது வலி இருக்காது.

இதற்கு இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடி பெரிதும் உதவி புரிகின்றது.

இந்த பொடியை பயன்படுத்துவதனால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது.

அந்தவகையில் இந்த அற்புத பொடியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பச்சைப்பயறு – 250 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
  • வெட்டி வேர் – 100 கிராம்
  • விலாமிச்சை வேர் – 100 கிராம்
  • சீமை கிச்சலி கிழங்கு – 100 கிராம்
  • கோரை கிழங்கு – 100 கிராம்
செய்முறை

முதலில் இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது தேவையான இடங்களில் பேக் போல போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் செய்யலாம். 6 மாதத்தில் நல்ல பயனை பெறலாம்.

இந்த பேக் போடுவதனால் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.