ஸ்கிரீன் ஷாட் முறையில் அல்லாது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றினை சேமிப்பது எப்படி?

by Nila | May 18, 2019 11:45 am

உலகளவில் ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இதில் ஸ்டேட்டஸ் எனும் வசதி ஒன்று பயனர்களை கவர்வதற்காக வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இவ்வாறான ஸ்டேட்டஸை மற்றையவர்களும் பயன்படுத்த விரும்புவார்கள்.

இதற்காக ஸ்கிரீன் ஷாட் வசதியினைப் பயன்படுத்தி குறித்த ஸ்டேட்டஸை தமது சாதனங்களில் சேமித்துக்கொள்வார்கள்.

இப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை நேரடியாக சேமிப்பதற்கு புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Status Saver எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று எந்த தொலைபேசி இலக்கத்திற்குரிய ஸ்டேட்டஸ்ஸை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அவ் இலக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

தொடர்நது Status Saver அப்பிளிக்கேஷனை செயற்படுத்தும்போது ஸ்டேட்டஸ் ஸ்கான் செய்யப்படும்.

அதன் பின் ஸ்டேட்டஸ் வீடியோவாகவா அல்லது படமாகவா சேமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்தால் போதும் உடனடியாக ஸ்டேட்டஸ் மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.

Source URL: http://tamilnaadu.news/archives/406