இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூற முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்துள்ள படம் Mr. லோக்கல்.
சரி லோக்கலாக சிவகார்த்திகேயன் எப்படி கலக்கியுள்ளார் என்பதை பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சிவகார்த்திகேயன் அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.
அவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையிடம் பார்க்க போக, அப்போது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார்.
அப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் கேட்பார் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு என்று, அதேபோல் நமக்கும் கேட்க தோன்றுகின்றது நம்ம சிவகார்த்திகேயனுக்கு என்ன தான் ஆச்சு என்று. தொடர் ஹிட் படங்களால் டாப் கியரில் சென்றவருக்கு போதாத காலம் போல.
கடந்த அனைத்து படங்களிலும் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அதேபோல் தான் இதிலும், என்ன ஒரு படி மேலே சென்று படம் முழுவதும் நயன்தாராவை டார்ச்சர் செய்கிறார், கூடவே நம்மையும்.
ராஜேஸ் படம் என்றாலே காமெடி என்று நம்பி போகலாம், ஆனால், இனி ராஜேஸ் படம் போகலாமா என்ற நிலை உருவாகிவிட்டது. ரோபோ ஷங்கர் பொண்டாட்டியிடம் அடிவாங்கும் ஒரு காட்சியை தவிர படத்தில் எங்கு தேடினாலும் காமெடி இல்லை. ஏன் யோகிபாபுவே டக் அவுட் ஆகி செல்கிறார்.
நயன்தாரா பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார், அதற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர், இதில் ஏன் இப்படி ஒரு நீலாம்பரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து வழக்கம் போல் ஆணவம் இழந்து, ஆண்களுக்கு வாக்கப்படும் ஒரு சாமானியப் பெண்ணாக நடித்தார் என்று தெரியவில்லை, கண்டிப்பாக அவர் தேர்ந்தெடுக்க கூடாத கதை இது.
ராஜேஷ், சந்தானம் இல்லாமல் காமெடி வறட்சியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதற்காக SMS, ஒரு கல் ஒரு கண்ணாடி காட்சிகளை அப்படியேவா வைப்பது?
ஹிப்ஹாப் ஆதிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை, தான் இசையமைத்த ஒவ்வொரு படங்களில் இருந்து ஒரு பாட்டை எடுத்து இதில் போட்டு மேட்ச் செய்துவிட்டார், ஒளிப்பதிவு மட்டுமே கலர்புல்லாக இருக்கிறது.
அப்பறம் சிவகார்த்திகேயன் நீங்கள் படத்தில் செய்வது காதல் இல்லை, ஸ்டாக்கிங். கதை தேர்வில் கொஞ்சம் கவனமாக இருங்கள், கிட்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் போதாது.
படத்தின் ஒளிப்பதிவு.
கை விட்டு எண்ணும் அளவிற்கான ஒரு சில கவுண்டர் டயலாக்ஸ்.
நயன்தாரா ஸ்கிரீன் ப்ரசன்ஸ், எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக செய்கின்றார்.
படத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும், கொஞ்சமாவது சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர், நயன்தாரா போல் ஆளுமை நிறைந்த நடிகை வைத்துக்கொண்டு நல்ல கதைக்கும் காட்சிக்கும் மெனக்கெடுத்து இருக்கலாம்.
மொத்தத்தில் மிஸ்டர் லோக்கல் நல்ல கூட்டணி அமைந்தும், எதிர்ப்பார்ப்பை எட்ட முடியவில்லை.
SK talented guy…wish him all the best
Comment:*
Nickname*
E-mail*
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.