உத்தியோகபூர்வ புதிய வசதியை தரவுள்ளது இன்ஸ்டாகிராம்

by Nila | February 14, 2018 10:51 pm

பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் Regram எனும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது இவ் வசதி தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ் வசதியின் மூலம் மற்றொருவரின் போஸ்ட்டினை தமது டைம் லைனில் பகிர்ந்துகொள்ள முடியும்.

இவ் வசதி ஏற்கணவே பேஸ்புக் வலைத்தளத்தில் தரப்பட்டுள்ளது.

இதேவேளை தமது போஸ்ட்களை மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் வசதியும் இதனுடன் தரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வசதி அறிமுகம் செய்யப்படுகின்றமை தொடர்பாக இன்ஸ்டாகிராம் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Source URL: http://tamilnaadu.news/archives/32