ஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை

ஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை
May 08 11:53 2020 Print This Article

சானா

ஏமன் மத்திய மாகாணங்களில் அரசாங்கப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் மரிப் அருகே நடந்த சண்டையில் முமகது அப்துல் கரீம் அல் ஹம்ரான் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்-ஹம்ரான், ஹவுதி புரட்சிபடையின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி என்றும், ஹவுதி தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி உடன் நெருங்கிய உறவை கொண்டவரும் கூறப்படுகிறது.இதுவரை இந்த ஆண்டு போரில் கொல்லப்பட்ட மிக உயர்ந்த தளபதி முகமது அல் ஹம்ரான் ஆவார்.

அல்-ஹம்ரான் ஹவுதி புரட்சிபடையின் உயரடுக்கு படைக்கு தலைமை தாங்கினார், இது லெபனான் ஹெஸ்பொல்லா போராளி குழுவிலிருந்து பயிற்சி பெற்றது என உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாகாணங்களுக்கு இடையிலான மோதல்களில் அல்-ஹம்ரான் கொல்லப்பட்டார் என ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் அரசாங்கப் படைகளை ஆதரிக்கும் சவுதி தலைமையிலான கூட்டணியுடனான போர் விமானங்கள் மாகாணங்கள் முழுவதும் ஹவுதி இலக்குகளை குண்டுவீசி தாக்கின. இருபுறமும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். பேடாவில் குறைந்தது 16 போராளிகள் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் ஹவுதிகள்

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.