உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்

by Nila | February 15, 2018 6:31 pm

உலகில் பாதுகப்புக்கு என அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவும் போட்டியிட்டு வருகின்றன.

லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனம் ஒன்று இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்கா 602.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாத குறிப்பிட்டுள்ளது.

இதன் அடுத்த இடத்தில் 150.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கி சீனா உள்ளது. 76.7 பில்லியன் டொலர்களுடன் 3-வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.

4-வது இடத்தில் 61.2 பில்லியன் டொலர்களுடன் ரஷ்யாவும், 52.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ள இந்தியா 5-வது இடத்திலும் உள்ளது.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு என 52.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கிய பிரித்தானியா இந்த முறை 50.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சீனாவின் உண்மையான பாதுகாப்புச் செலவுகள் 2016-17ல் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவின் செலவுகள் 2.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவை விடவும் அதிக நீர்மூழ்கிக் கப்பல்கள், வழிமறித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அதிக அளவில் சீனா உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source URL: http://tamilnaadu.news/archives/137