கல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள்…

கல்லூரி காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நாயகிகள்…
February 15 12:01 2018 Print This Article

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் தங்களின் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

அனுஷ்கா கூறியதாவது:- “கல்லூரி நாட்களில் என்னை நிறைய பேர் காதலித்தனர். அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எவ்வளவோ பேர் என்னை சுற்றி வந்தார்கள். அவர்கள் பார்த்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை. இதனால் வெறுத்துப்போய் விலகி விட்டார்கள். எனக்கு யார் மீதும் விருப்பம் ஏற்படவில்லை.

ஆனால் ராகுல் டிராவிட் மீது மட்டும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவரின் தீவிர ரசிகையாகி விட்டேன். நாளடைவில் அவர் மீதான ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது. அதை ஈர்ப்பு என்றோ காதல் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை சந்திக்கவே இல்லை. அதன்பிறகு என் வாழ்க்கையில் காதல் கதைகள் இல்லை. காதல் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. காதலில் உண்மையாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் ஜெயிக்கும்.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:- “கல்லூரி நாட்களில் ஒருவர் என்னை நேர்மையாக காதலித்தார். அவர் எனது நண்பராகவும் இருந்தார். ஒருநாள் உன்னோடு சேர்ந்து இருக்க ஆசைப்படுகிறேன். திருமணம் செய்துகொள்ளலாமா? என்று தைரியமாக கேட்டார். காதல், திருமணத்துக்கெல்லாம் அது சரியான நேரம் இல்லை என்று எனக்கு தோன்றியது.

ரொம்ப யோசித்து மறுத்து விட்டேன். என் மனதை புரிந்துகொண்டு அவர் விலகிவிட்டார். அதன்பிறகு காதல் பற்றி யோசிக்கவே இல்லை. சினிமா துறைக்கு வந்த பிறகு ரசிகர்கள் என்னை காதலிப்பதாக போனில் தகவல் அனுப்புகிறார்கள். காதல் கடிதங்களும் வருகின்றன. காதல் கடிதங்களை படிக்கும்போது என்னிடம் முதலில் காதலை வெளிப்படுத்திய அந்த நண்பர் ஞாபகத்துக்கு வருகிறார்.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

நடிகை ரகுல்பிரீத் கூறியதாவது:- “சிறுவயதிலேயே நிறைய சேட்டைகள் செய்வேன். பையன் மாதிரியே இருக்க விரும்புவேன். தலைமுடியில் ஜடை போடுவது, நெற்றியில் பொட்டு வைப்பது பிடிக்காது. என் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள்தான். காதலுடன் யாரும் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு என் நடவடிக்கைகள் மாறி பெண்போல் நடந்துகொண்டேன்.

அப்போது நிறைய பேர் காதலிக்கிறேன் என்று சொல்லி என்னை பின்தொடர்ந்தார்கள். அவர்கள் காதலில் உண்மை இல்லை. எனக்கு காதல் மீது நம்பிக்கைஉள்ளது. காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.